மாற்றுக் கருத்துள்ளவர்களை எதிரியாகவும் துரோகியாகவும் காட்டும் கலாசாரத்தை கைவிட வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா!!

Read Time:3 Minute, 51 Second

unnamed (49)மாற்றுக் கருத்துள்ளவர்களை எதிரியாகவும் துரோகியாகவும் வர்ணிக்கும் கலாசாரத்திலிருந்து விடுபட அனைவரும் முன்வர வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய மணல் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அரைக்கும் ஆலையினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மாகாண சபையின் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கின்றனர் எதிர்க்கட்சியைச் சார்ந்து நான் இருக்கின்றேன் காரைநகர் பிரதேச சபை ஆளுங்கட்சி தவிசாளர் இருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கின்றார் நூறு வீதம் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பித்து வைத்துள்ள இவ் அரைக்கும் ஆலைக்கு மத்திய அரசைச் சேர்ந்த ஓர் நிர்வாகி தலைமை வகிக்கின்றார். மாற்றுக்கருத்து உள்ளவர்களும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடமுடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

மாற்றுக் கருத்துள்ளவர்களை எதிரியாகவும்இ துரோகியாகவும் காட்டும் கலாசாரத்தை எமது ஊடகங்கள் வளர்த்திருக்கின்றன. உதாரணமாக இஸ்ரேல் என்ற நாட்டினை எடுத்துக் கொள்வோமேயானால்இ அங்கு பதின்நான்கு அரசியற் கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களுடன் பாராளுமன்றத்தில் 1960 களில் இருந்த போதுதான் தன்னைச் சூழ்ந்த பல நாடுகளின் பிரதேசங்களைக் கைப்பற்றி சகல துறைகளிலும் முன்னணியில் உள்ள நாடாகத் திகழ்ந்தது. இதனைப் போன்றே வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமையாகச் செயற்படமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் டெனிஸ்வரன்இ காரைநகர் பிரதேச செயலாளர் திருமதி.தேவனந்தினி பாபு வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் ஆனைமுகன் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச அமைப்பாளரும் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான வீ.கண்ணன் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு ஜே.ஜே.சி.பெலிசியன் பெரியமணல் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மு.அருணாசலம ஆகியோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய அணி தோல்வி எதிரொலி: உ.பி. அரசு ஊழியர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை!!
Next post நடிகை -ஹன்சிகா (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-