ஜோலார்பேட்டையில் குழந்தை வரம் கேட்டு கோவில் முன்பு நாக்கை அறுத்து வைத்த வாலிபர்!!

Read Time:1 Minute, 37 Second

d798158d-2eec-44e4-afcb-3e2fd1a86f19_S_secvpfஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கிராமத்தில் வேடியப்பன் கோவில் உள்ளது.

இந்த கோவில் முன்பு இன்று மதியம் 12 மணியளவில் மிட்டாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் (வயது 24) உட்கார்ந்திருந்தார்.

அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து நாக்கை அறுத்து கோவில் முன்புள்ள கல்லின் மீது வைத்தார். இதில் ரத்தம் நிற்காமல் கொட்டியது. இதையறிந்த அந்த பகுதி மக்கள் வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதையறிந்த அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

அவரை பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர். அதில் திருமணமாகி 3 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், குழந்தை வரம் கேட்டு சாமிக்கு வாலிபர் நாக்கை அறுத்துக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் கோவில் முன்பு அறுத்து வைக்கப்பட்டிருந்த நாக்கை பார்க்க அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்த ரிக் தொழிலாளி!!
Next post மனநலம் குன்றிய இளம்பெண் கற்பழிப்பு: மாநகராட்சி டிரைவர் கைது!!