மேற்குவங்க சி.ஐ.டி. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை: கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

Read Time:2 Minute, 14 Second

0b2338b4-26ee-44e7-a012-1ea40cb439f8_S_secvpfமேற்கு வங்காள மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில், 72 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை அம்மாநில சி.ஐ.டி. போலீஸ் மும்பையில் கைது செய்துள்ளது.

முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி அறிந்ததும் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்ட அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, குற்றவாளிகளை கண்டு பிடிக்க போலீஸ் படையை முடுக்கி விட்டார். உடனடியாக 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இச்சம்பவத்தில் நேரடியாக தொடர்புடைய குற்றவாளிகள் எவரையும் கைது செய்யமுடியாமல் சி.ஐ.டி. போலீஸ் திணறிவந்தது.

இச்சம்பவம் நடந்து 12 நாட்கள் ஆண நிலையில், சலீம் என்ற குற்றவாளியை மும்பையில் வைத்து மேற்கு வங்க சி.ஐ.டி. போலீஸ் இன்று கைது செய்துள்ளது. குற்றவாளியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கைது செய்ததாக போலீஸ் உயரதிகாரி ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த 18-ம் தேதி அறிவித்திருந்தார். எனினும் சி.பி.ஐ. இன்னும் தனது விசாரணையை தொடங்கவில்லை. மேலும் இப்பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசு மீது கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது இடங்களில் முத்தமிடுவதற்கு தடை விதித்த கோவா கிராமம்!!
Next post தூத்துக்குடியில் குடிநீர் குழாய்களை உடைத்து தண்ணீரை திருடும் கும்பல்!!