40–க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு: கைதான காமக்கொடூரர்கள் திருச்சி சிறையில் அடைப்பு!!

Read Time:3 Minute, 58 Second

39d757f0-4310-4df6-b305-7d459d82ed14_S_secvpfசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தானாவயலை சேர்ந்த மெலிண்டா (வயது 24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ற பெண் கடந்த 16–ந்தேதி தனது ஆண் நண்பருடன் காரைக்குடி–திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள ஆவுடைபொய்கை என்ற இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் போலீஸ் என்று கூறி மெலிண்டாவை கடத்தி சென்று கற்பழித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மெலிண்டா நடந்த சம்பவம் குறித்து காரைக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, ரவீந்திரன், சுரேஷ் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர். போலீசார் சம்பவம் நடத்த காட்டுப் பகுதியில் இருந்த செல்போன் டவரில் கற்பழிப்பு நடந்த அந்த நேரத்தில் பதிவான செல்போன் எண்களை ஆய்வு செய்தனர்.

இதில் காரைக்குடி–திருச்சி பைபாஸ் ரோட்டில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் அர்ச்சுணன் (வயது 31) என்பவரின் செல்போன் எண் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அர்ச்சுணனை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் மெலிண்டாவை கற்பழித்தது தானும், கீழப்பட்டியை சேர்ந்த சாத்தையாவும் (40) என தெரிவித்தார்.

அதன் பேரில் சாத்தையாவையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சாத்தையாவும், அர்ச்சுணனும் சேர்ந்து கொண்டு ஆவுடை பொய்கை காட்டுப்பகுதியில் வரும் காதல் ஜோடிகள், கல்லூரி மாணவிகள், கள்ளக்காதல் ஜோடிகள் என வருபவர்களிடம் ஆண்களை விரட்டிவிட்டு பெண்களை மட்டும் காட்டுப் பகுதிக்கு கடத்திச்சென்று கொடூரமாக கற்பழித்து வந்துள்ளனர்.

இந்த சம்பவங்களில் சில வி.ஐ.பி.களும் சிக்கியுள்ளனர். அவமானம் தாங்காத சில அபலை பெண்கள் வெளியில் சொல்ல பயந்து போய் போலீசிலும் புகார் செய்யவில்லை. இதனால், காமக்கொடுரர்களின் லீலை தொடர்ந்து அரங்கேறி வந்துள்ளது.

இவ்வாறு 40–க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்த காமக்கொடூரர்கள், சில பெண்கள் அணிந்து வந்த நகைகளையும் பறித்துள்ளனர்.

மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து காமக்கொடூரர்களான அர்ச்சுணன், சாத்தையாவை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 75 பவுன் நகையை மீட்டனர். பின்னர் 2 பேரும் காரைக்குடி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலப்பு திருமணம் செய்த கல்லூரி மாணவி கடத்தல்: தந்தை மீது காதல் கணவர் புகார்!!
Next post கேரளாவில் கொடூரம்: ஒன்றரை வருடங்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பள்ளி சிறுமிகள்- 6 பேர் கைது!!