கேரளாவில் ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: யோகா குரு கைது!!

Read Time:2 Minute, 26 Second

c1495462-8a14-43b2-8c61-8debf9330196_S_secvpfகேரள மாநிலம் தொடு புழாவை அடுத்த கடலைக்காட்டு வீடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 58). இவர் அந்த பகுதியில் யோகா சென்டர் நடத்தி வந்தார். மேலும் தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டு குடும்ப பிரச்சினை, மாணவிகளுக்கு தேர்வு பயம், திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுப்பது உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆன்மீக வழியில் தீர்வு காண்பதாக அப்பகுதி மக்களிடம் கூறி வந்தார்.

மேலும் தனது பெயரை குருஜி சத்குரு திவ்யானந்த ஸ்ரீ யோகானந்த ஸ்ரீஜி என மாற்றி கொண்டு யோகா மற்றும் தியான வகுப்புகளையும் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது யோகா மையத்திற்கு ஆதிவாசி பெண் ஒருவர் சென்றார்.

அவர் தனக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறினார். அதற்கு தீர்வு காண்பதாக தெரிவித்த யோகா குரு, அந்த பெண்ணை 20 நிமிடம் கண்ணை மூடியபடி தியானம் செய்ய கூறினார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி அந்த ஆதிவாசி பெண் உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் யோகா மையத்திற்கு சென்று அங்கு அடித்து உடைத்தனர். மேலும் யோகா குரு பற்றி தொடுபுழா போலீசிலும் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து யோகா குரு ராஜூ என்ற குருஜி சத்குரு திவ்யானந்த ஸ்ரீ யோகானந்த ஸ்ரீஜியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் 9–ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதும் யோகா என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திராவுக்கு சென்ற சென்னை ரெயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை!!
Next post பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொலை!!