பட்ற (திரைவிமர்சனம்)!!

Read Time:4 Minute, 9 Second

patara2கல்லூரியில் படித்து வரும் நாயகன் மிதுன் தேவ்வுக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் பகுதி செயலாளர் மகனுக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் மிதுன் தேவ்-ஐ போலீஸ் கைது செய்கிறது. அவரை வெளியே கொண்டு வர அவரது பெற்றோர்கள் முயற்சி செய்தும் முடியவில்லை.

இந்நிலையில், இவர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் உமா, அடியாட்கள் வைத்து கொலைகளை செய்து வரும் முக்கிய புள்ளியான சாம்பாலின் உதவியோடு நாயகனை வெளியே அழைத்து வருகிறார். இந்நிலையில், பகுதி செயலாளரான புலிப்பாண்டிக்கும், சாம்பாலுக்கும் ஏற்படும் சண்டையில் சாம்பால் புலிப்பாண்டியை கொல்ல முயற்சி செய்கிறார். இதில் புலிப்பாண்டியில் மைத்துனர் இறந்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த புலிப்பாண்டி போலீசிடம் சொல்லி சாம்பாலின் ஆட்களை செய்ய வைக்கிறார்.

காவல் நிலையத்தில் இருந்து சாம்பாலின் உதவியோடு வெளியே வந்ததால், நாயகன் மிதுன் தேவும் சாம்பாலின் ஆள்தான் என்று சொல்லி அவரையும் போலீஸ் கைது செய்கிறது. இதற்கிடையில் அரசியலில் முக்கிய புள்ளியான ரேணிகுண்டா கணேஷ், சாம்பாலையும் புலிப்பாண்டியையும் சமாதானம் செய்துவைத்து, இருவரையும் நண்பர்களாக்குகிறார்.

இதற்கிடையில், சாம்பாலின் கூட்டாளியான உமா, நாயகனை காப்பாற்றுவதாகக் கூறி நாயகனின் தங்கையை அழைத்து வந்து சாம்பாலுக்கும், புலிப்பாண்டிக்கும் விருந்தாக்குகிறார். இதை வெளியே சொன்னால், அவளது நிர்வாண புகைப்படங்களை போஸ்டர் அடித்து ஒட்டுவதாகவும் அவளை மிரட்டி அனுப்புகிறார்.

ஜெயிலில் இருந்து வெளியே வரும் மிதுன் தேவ், தனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க களம் இறங்குகிறார். இறுதியில் அவர்களை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் மிதுன் தேவ்-க்கு இப்படத்தில் நாயகியுடன் டூயட் பாடவோ, ரொமான்ஸ் செய்யவோ வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால், பிற்பாதிக்கு பின்னர் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை திறம்பட செய்திருக்கிறார்.

நாயகியாக வரும் வைதேகிக்கு படத்தில் சில காட்சிகள்தான். பார்ப்பதற்கு பளிச்சிடுகிறாரே தவிர, நடிப்பில் மிளிரவில்லை. சாம்பால், புலிப்பாண்டி இருவரும் தங்களது முதல் படத்திலேயே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். இயக்குனர் ஜெயந்தன் அதர பழசான கதையையே புதிய பாணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். ஆனால், ரொம்பவும் சுமாரான படமாக கொடுத்திருப்பதால் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஸ்ரீகிருஷ்ணாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். வேலாயுதனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.

மொத்தத்தில் ‘பட்ற’ பத்தல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜார்க்கண்டில் 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தல்: தட்டிக்கேட்க நான் கடவுள் திரைப்பட பாணியில் அகோரி வருவாரா?
Next post கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களின் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு சன்மானம்!!