சிதம்பரத்தில் பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது!!

Read Time:1 Minute, 38 Second

1b63328e-52c4-4300-8a8c-fab308bc6fdb_S_secvpfசிதம்பரத்தில் போலி டாக்டர்கள் இருப்பதாக போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் தலைமையில் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளை தெரு, கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெரு, வேங்கான்தெரு ஆகிய இடங்களில் உள்ள கிளினிக்குகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சித்த மருத்துவம் படித்துவிட்டு எம்.பி.பி.எஸ். டாக்டர் என்று கூறி நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மற்றும் ஊசி போட்டு சிகிச்சை அளித்ததாக கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெருவில் கிளினிக் நடத்திய சிதம்பரம் அண்ணா தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் வேணுகோபால் பிள்ளை சாலையில் கிளினிக் நடத்திய சிதம்பரம் வண்டிகேட்டை சேர்ந்த சேகர் மனைவி நீலாவதியும் (37) கைது செய்யப்பட்டார். போலீசாரின் திடீர் ஆய்வை முன்கூட்டியே அறிந்த வேங்கான் தெருவை சேர்ந்த போலி டாக்டர் சங்கர் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வேலைவீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சின்னக்கரை தர்காவில் கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொல்ல முயற்சி: வாலிபர் கைது!!
Next post பெண் போலீஸ் ஆபாச ஆடியோவில் சிக்கிய உதவி கமிஷனர் விடுப்பில் சென்றார்: இறுதிக்கட்ட விசாரணை தீவிரம்!!