பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது.. -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன்!!

Read Time:3 Minute, 13 Second

timthumb (2)எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சித்தார்த்தனை வன்னி மாவட்டத்தில் போட்டியிடுமாறு கூட்டமைப்பில் உள்ள தனிநபர்கள் தரப்புக்களால் வலியுறுத்தப்படுவதாக வெளியாகி வருகின்ற செய்திகள் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘பொதுத் தேர்தல் தொடர்பில் எந்தவிதமான கலந்துரையாடல்களோ, தீர்மானங்களோ கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. இதுபோன்ற வதந்திகள் கூட்டமைப்பில் போட்டியிட விரும்பும் சில தனிப்பட்ட நபர்களினால் மேற்கொள்ளப்படும் தந்திரோபாய நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன்.

பொதுத்தேர்தல் தொடர்பில் தேசிய கட்சிகளே பல்வேறு அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றன. ஆகையால் பொதுத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதே தெளிவாகவில்லை.

ஆனால் பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. அவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார்.

மேலும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு இம்முறை பொதுதேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என்று சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்து தெரிவித்த சித்தார்த்தன்,

‘இவ்வாறான செய்திகளும் வெளியாகின்ற போதிலும், கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் இதனை தெரிவிக்கவில்லை. மாறாக ஒரு சிலர் தங்களது தேவைகளுக்காக இவ்வாறு பேசி வருகின்றனர். இது கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்காது’ என்றும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீன நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்: அள்ளிப்போக அலைமோதிய கூட்டம்- வீடியோ இணைப்பு!!
Next post நெல்லை அருகே குடும்பத்துடன் விஷம் குடித்த விவசாயியின் மனைவியும் பலி: மகனுக்கு தீவிர சிகிச்சை!!