புரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி 92 வயதில் மரணம்: கடவுளின் மனித துணைவி முறை முடிவுக்கு வந்தது!!

Read Time:1 Minute, 28 Second

edc3f4d6-58cd-45e3-90c7-bfcbc2858ffe_S_secvpfபுரி ஜெகன்நாத் கோவிலின் 800 ஆண்டு கால பழமையன தேவதாசி முறையானது, சஷிமாணி தேவி என்ற 92 வயது பெண்னின் மரணத்தால் முடிவுக்கு வந்தது.

ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகன்நாத் கோவிலில் சஷிமாணி தேவி கடவுளின் மனித துணைவியாகவும், அந்த கோவிலின் ஒரே பெண் பணியாளரகவும் இருந்து வந்தார். இவரின் முக்கிய பணி கோவிலின் விஷேச நாட்களில் கடவுள் முன் நடனம் ஆடுவது மற்றும் கீதையை பாடலாக பாடுவதும் ஆகும்.

உடல் நலக்குறைவால் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பே தனது பணியை விட்டு தனது வளர்ப்பு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அவரது உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவினார் சஷிமணி தேவி. இவரின் மரணத்துடன் 12-ம் நூற்றாண்டில் உருவான பழமையான புரி ஜெகன்நாத் கோவிலின் தேவதாசி நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. இவர் தனது 68 ஆண்டுகளுக்கு முன் இந்த கோவிலில் தேவதாசியாக பணியாற்ற தொடங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!
Next post தேர்வில் தோல்வி பயம்: பிளஸ்–2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை!!