குடியாத்தம் அருகே 3–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!

Read Time:2 Minute, 2 Second

0b27a6e2-32bc-4dd2-a319-b057d8d98422_S_secvpfஆந்திர மாநில எல்லையை ஒட்டியபடி உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பீமன், தொழிலாளி. இவரது மகள் கமலா (வயது 8) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது).

கமலா வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வந்தாள். அதே கிராமத்தில் பெற்றோரை இழந்த 16 வயது சிறுவன் உறவினர் வீட்டில் வசித்து வருகிறான்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டிற்குள் புகுந்த அந்த சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி விபரம் தெரியாத மாணவி இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவி சோர்வாக இருந்துள்ளாள். அப்போது அவளிடம் பள்ளி ஆசிரியை கேட்டபோது, நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இதுபற்றி மாணவியின் பாட்டிக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் பாட்டி குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்–இன்ஸ்பெக்டர் ஜமுனாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் அனுப்பிய 3 ஆசிரியர்கள் உள்பட 4 பேர் கைது!!
Next post மயிலாடுதுறை அருகே குடும்ப தகராறில் கணவன்–மனைவி தற்கொலை!!