அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!!

Read Time:1 Minute, 48 Second

63c5d6bf-3ebf-4acf-a66b-585ace1c2e43_S_secvpfதிருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் வகையில், விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள்.

இப்போது விண்டோஸ் 7 அல்லது 8-ஐ பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அந்நிறுவனம் இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த உள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தை இலவசமாக அப்டேட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் அனுமதியில்லாமல் விண்டோசை பயன்படுத்துபவர்களை நேர்மையான பயனாளர்களாக மாற்ற முடிவு செய்துவுள்ளது மைக்ரோசாப்ட். இதனால் தரமான விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த தகவலை சீனாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் இயக்குனர் டேர்ரி மைர்சன் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் நான்கில் மூன்று பங்கு உரிமம் அற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக்கில் கலக்கும் பஞ்சாப் சிறைக் கைதிகள் போட்டோ: போலீஸ் திணறல்!!
Next post பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள்: திணறும் போலீசார்-வீடியோ இணைப்பு!!