டி.என்.பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:1 Minute, 32 Second

614d2502-7d39-409b-9405-1d4a99ab070f_S_secvpfஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 16–பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பிளஸ்–1 படித்து வருகிறார்.

இவருக்கு வருகிற 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையொட்டி திருமண பத்திரிகையும் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.

இது குறித்து குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே ஒருங்கிணைப்பாளர் பீட்டர் பால்ராஜ், சமூக நலத்துறை விரிவாக்க அதிகாரி அறிவு கொடி மற்றும் ஜோஸ்வர் வில்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் 18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது தவறு. எனவே உங்கள் மகளுக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வையுங்கள் என்று அறிவுரை கூறினர்.

இதை லட்சுமியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். இதன் பிறகு அதிகாரிகள் அவர்களிடம், “எங்கள் மகளுக்கு 18 வயது நிரம்பியவுடனேயே திருமணம் செய்து வைப்போம்” என்று எழுதி வாங்கினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகம் சுளிக்க வைக்கும் நூதன போராட்டம்: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு!!
Next post அருப்புக்கோட்டை கோவில் தெப்பக்குளத்தில் கர்ப்பிணி பெண் மர்ம சாவு: போலீஸ் விசாரணை!!