பேஸ்புக்கில் கலக்கும் பஞ்சாப் சிறைக் கைதிகள் போட்டோ: போலீஸ் திணறல்!!

Read Time:2 Minute, 13 Second

d31e2e38-a25c-4016-abe3-22cd9297584d_S_secvpfபஞ்சாப்பை சேர்ந்த சிறைக்கைதிகள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தங்கள் படத்தை வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

தண்டனை அனுபவிப்பதற்காகத்தான் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் கைதிகளுக்கு கிடைக்காமல் அவதிப்படுவது இயல்பு. ஆனால், பஞ்சாப் சிறை கைதிகளின் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது.

போலீஸ் மீது துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக பாதின்டா மத்திய சிறையில் இருக்கும் தாதாவான குல்பர் சிங் மற்றும் அவனது கூட்டாளிகள் சிறையில் இருந்தபடியே இன்டர்நெட் இணைப்புள்ள போன்களை பயன்படுத்தி தங்கள் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட புகைப்படத்தில் ஒருவர் போனில் பேசுவதுபோல் போஸ் கொடுக்க மற்றவர்கள்ள ‘ஹாயாக’ சுவற்றில் சாய்ந்தபடி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுபற்றி அச்சிறையின் துணை கண்காணிப்பாளர் மான்ஜித் சிங் கூறுகையில், “இந்த தகவல் தெரிந்தவுடன் அவர்கள் அனைவரும் வெவ்வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சிறையில் பயன்படுத்திய போன்களை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருந்தபடியே பஞ்சாப் கைதிகள் பேஸ்புக்கை பயன்படுத்துவது இது முதல்முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொருக்குப்பேட்டையில் தங்கையின் கணவர் மீது ஆசிட் ஊற்றிய பெண்!!
Next post அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!!