கொருக்குப்பேட்டையில் தங்கையின் கணவர் மீது ஆசிட் ஊற்றிய பெண்!!

Read Time:2 Minute, 6 Second

abe57ee7-fb55-458b-863d-559b21b8622b_S_secvpfகொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் சொர்ணா (வயது 42). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகளுடன் வசித்து வந்தார்.

இவரது தங்கையின் கணவர் லட்சுமணய்யா. ஆந்திராவில் குடும்பத்துடன் தங்கி இருந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு தனியாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் அடிக்கடி சொர்ணா வீட்டுக்கு வருவது வழக்கம்.

நேற்று இரவு லட்சுமணய்யா, சொர்ணா வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வீட்டு முன்பு நின்றபடி இருவரும் ஒருவரை ஒருவரை திட்டிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த சொர்ணா வீட்டில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வந்து லட்சுமணய்யா மீது ஊற்றினார். அந்த நேரத்தில் அவர்கள் அருகே நடந்து சென்ற அதே பகுதி அண்ணாநகரை சேர்ந்த வினோத்குமார் முகத்திலும் பட்டது. இதில் 2 பேரின் முகம், உடல் வெந்து அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குபதிவு செய்த சொர்ணாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். லட்சுமணய்யா எதற்காக வந்தார். அவர்களுக்கிடையேயான தகராறு குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தங்கையின் கணவர் மீது பெண் ஆசிட் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன் கண்முன்பே மனைவி கற்பழிப்பு: தலைமறைவாக இருந்த மேலும் ஒரு வாலிபர் இன்று கைது!!
Next post பேஸ்புக்கில் கலக்கும் பஞ்சாப் சிறைக் கைதிகள் போட்டோ: போலீஸ் திணறல்!!