களக்காடு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு வலைவீச்சு!!

Read Time:1 Minute, 39 Second

abcfe2aa-b79c-47ab-b69b-6479fce21e2f_S_secvpfநெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த சிறுமி தேவி (வயது 6, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று அவள் வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தாள்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலசுப்பிரமணியன் தேவியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி தேவியை அங்குள்ள மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

அவளது அழுகை சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் திரண்டு சென்றனர். அதற்குள் பாலசுப்பிரமணியன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நெல்லை சரணாலய சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். சைல்டுலைன் பணியாளர்கள் சத்யா, ரஷிதா ஆகியோர் தேவியையும், அவளது பெற்றோரையும் அழைத்து சென்று நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோபியில் பெண் கொலை: செய்வினை வைத்ததால் கொன்றேன்-கைதான கூலித்தொழிலாளி வாக்குமூலம்!!
Next post பாளையில் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்!!