மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க ஆசிரியை நியமிக்க வேண்டும்: வேலூர் கலெக்டர் உத்தரவு!!

Read Time:2 Minute, 56 Second

cc6a0842-de60-4f55-9a72-55f89b1fa823_S_secvpfபாலியல் திருமணம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் மற்றும் பெண்கள் குழந்தைகளை கடத்துதலை தடுத்தலுக்கான ஆலோசனை குழு கூட்டம் கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,

குழந்தைகள் வியாபார நோக்கத்துடன் கடத்தலை தடுத்தல் குறித்தும் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் விளம்பர பலகைகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், கிராம மற்றும் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தடுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும்.

பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் குழந்தை தொழிலாளர் தடுப்பது குறித்தும் நடைபயண விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.

பள்ளி மாணவ, மாணவியர்களின் புகார்களை பெற புகார் பெட்டி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.

தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடியும் தருவாயில் உள்ளதால் பள்ளி மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறுதலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்தல், பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அனைத்து பள்ளிகளிலும் ஒரு பெண் ஆசிரியை பெண் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட வேண்டும் என்று கலெக்டர் நந்தகோபால் பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிரிக்கெட் பார்ப்பதற்காக டி.வி ரிமோட்டை பிடுங்கிய மகன்: தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட தாய்!!
Next post மதுரையில் ஆடிட்டர்–மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை!!