கிரிக்கெட் பார்ப்பதற்காக டி.வி ரிமோட்டை பிடுங்கிய மகன்: தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட தாய்!!

Read Time:1 Minute, 56 Second

f2226d68-b477-4acc-9d3f-1eaee4202543_S_secvpfமும்பை நகரின் நவி மும்பை டவுன்ஷிப்பில் உள்ள கமோதேவைச் சேர்ந்தவர் ஷபனா பெர்சாடே(38) மூன்று குழந்தையின் தாயான இவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் ஷாரூக் கிரிக்கெட் சேனல் ஒன்றை வைக்கச்சொல்லி நச்சரித்த படியே இருந்தான். மும்முரமாக டி.வி பார்த்துக் கொண்டிருந்த ஷபனா அதைக் கண்டு கொள்ளவில்லை.

திடீரென, டி.வி ரிமோட்டை பிடுங்கிக் கொண்ட ஷாரூக் கிரிக்கெட் சேனலை மாற்றிவிட்டு டி.வி பார்க்கத் தொடங்கினான். ரிமோட்டைத் தன்னிடம் தரும்படி அம்மா மிரட்டியதை அவன் கண்டு கொள்ளாமலே இருந்தான். ஒரு கட்டத்தில், கோபமடைந்த ஷபனா தனது அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டார்.

கோபம் குறைந்ததும் வந்து விடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த அம்மா நீண்ட நேரமாகியும் வராததால் அறைக்குச் சென்ற ஷாரூக் அங்கு அவர் தூக்கில் தொங்கியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். பதறிப் போய் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் தகவல் சொன்னான். அவர்கள் அவனது அம்மாவை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்க்ள் அவரது உயிர் பிரிந்து விட்ட துயர செய்தியை தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபசார விடுதிக்குள் புகுந்து அழகியை மிரட்டி 5 பேர் கற்பழிப்பு: பா.ஜனதா பிரமுகர் நண்பர்களுடன் கைது!!
Next post மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க ஆசிரியை நியமிக்க வேண்டும்: வேலூர் கலெக்டர் உத்தரவு!!