விபசார விடுதிக்குள் புகுந்து அழகியை மிரட்டி 5 பேர் கற்பழிப்பு: பா.ஜனதா பிரமுகர் நண்பர்களுடன் கைது!!

Read Time:2 Minute, 51 Second

9549fae0-01c6-4150-a52d-cd1835158eeb_S_secvpfதிருப்பதி சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் விசுவநாத். பா.ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு மாநில துணைத்தலைவராக உள்ளார்.

திருப்பதி ஸ்ரீநகர் காலனியில் ஸ்ரீனிவாசராவ் என்பவர் ரகசியமாக விபசார விடுதி நடத்தி வந்ததை அறிந்த விசுவநாத் தனது நண்பர்கள் பிரதீப், ஹேமந்த், தாமோதர், வம்சி ஆகியோருடன் விடுதிக்குள் புகுந்தார்.

5 பேரும் தங்களை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கூறி விபசார விடுதி நடத்தி வந்த ஸ்ரீனிவாசராவை மிரட்டினர். அதோடு 2 அழகிகளை அடித்து மிரட்டி மானபங்கப்படுத்தினர்.

பின்னர் நள்ளிரவு விடுதி நடத்தும் ஸ்ரீனிவாசராவுடன் செல்போனில் பேசி உடனடியாக 2 அழகியை கோவிந்த ராஜ சாமி கோவில் குளம் அருகே அழைத்து வரும்படி மிரட்டினார். பயந்து போன ஸ்ரீனிவாசராவ் 2 அழகியை அழைத்து வந்தார்.

அதில் ஒரு அழகியை அருகில் உள்ள லாட்ஜுக்கு தூக்கிச் சென்று விசுவநாத்தும், அவரது 4 நண்பர்களும் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தனர். இன்னொரு அழகி விபசாரத்துக்கு உடன்பட மறுத்ததால் அவரை இறகுபந்து மட்டையால் அடித்து துன்புறுத்தினர்.

அதோடு நிறுத்தி கொள்ளாமல் தினமும் விபசார விடுதிக்கு வந்து அழகிகளை கற்பழித்தும் உடன்படாத அழகியை அடித்து துன்புறுத்தியும் வந்தனர்.

போலீசில் புகார் செய்தால் தான் விபசாரம் நடத்துவது தெரிந்து விடும் என்பதால் ஸ்ரீனிவாசராவ் அமைதியாக இருந்தார்.

ஆனால் விசுவநாத் தொல்லை தொடர் கதையாக இருந்ததால் வேதனை அடைந்த ஸ்ரீனிவாசராவ் திருப்பதி அலிபிரி போலீசில் நேரில் சென்று புகார் செய்தார்.

இதையடுத்து டி.எஸ்.பி. ரவிசங்கர் ரெட்டி தலைமையில் அலிபிரி போலீசார் பா.ஜனதா பிரமுகர் விசுவநாத், அவரது நண்பர்கள் பிரதீப், ஹேமந்த், தாமோதர், வம்சி ஆகியோரை கைது செய்தனர். கைதான பிரதீப் சுய சேவை அமைப்பை சேர்ந்தவர்.

விபசார விடுதி நடத்தி வந்த ஸ்ரீனிவாசராவையும் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடி போதையில் வேகமாக ஓட்டிய கார் விபத்தில் சிக்கி தீக்கோளமாக மாறியது: 3 வாலிபர்கள் உடல் கருகி பலி!!
Next post கிரிக்கெட் பார்ப்பதற்காக டி.வி ரிமோட்டை பிடுங்கிய மகன்: தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட தாய்!!