கூட்டாக சேர்ந்து தன்னை கற்பழித்த கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்த 71 வயது கன்னியாஸ்திரி!!

Read Time:2 Minute, 46 Second

ddc538e1-f8f2-4ae6-aae8-7519a5508d5b_S_secvpfமேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு ஆசிரமத்தில் தன்னை கூட்டாக சேர்ந்து கற்பழித்த கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பாதிக்கப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி பிரார்த்தனை செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு ஆசிரமம் உள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த ஆசிரமத்துக்குள் புகுந்த நான்கைந்து பேர் கொண்ட ஒரு கும்பல், உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 71 வயது கன்னியாஸ்திரியின் கழுத்தை பிடித்து நெரித்து அவரை கொடூரமான முறையில் கற்பழித்தது.

மயங்கிய நிலையில் அவர் கிடந்தபோது பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்த அந்த கும்பல் தலைமறைவானது.

தற்போது ரனகட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அந்த கன்னியாஸ்திரியை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட உடல் மற்றும் மனவலியால் அவதிப்படும் அந்த கன்னியாஸ்திரி, தனது நிலையை பொருட்படுத்தாமல் சம்பவம் நடந்த அந்த பள்ளி மற்றும் அங்கு படிக்கும் மாணவ்-மாணவியரின் எதிர்காலம் குறித்து அதிகமாக கவலைப்படுவதாக ஆஸ்பத்திரி சூப்பிரண்ட் அடிந்தர்நாத் மொண்டல் தெரிவித்துள்ளார்.

தனக்கு தீங்கு செய்தவர்களை மன்னித்து விடுமாறு பிரார்த்தனை செய்த அவரது கருணை உள்ளத்தை எண்ணி கண்ணீர் வடிக்கும் உள்ளூர் பெண் ஒருவர், ‘எங்களைப் பொருத்தவரை இந்த கொடூர குற்றத்தை செய்த அனைவரும் கைது செய்யப்பட்டு விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பறிபோகிறது பத்ம ஸ்ரீ விருது ?
Next post குடி போதையில் வேகமாக ஓட்டிய கார் விபத்தில் சிக்கி தீக்கோளமாக மாறியது: 3 வாலிபர்கள் உடல் கருகி பலி!!