பறிபோகிறது பத்ம ஸ்ரீ விருது ?

Read Time:1 Minute, 48 Second

saif_ali_khanபாலிவுட்டின் பிரபல கதாநாயகனாக இருக்கும் சைப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கரினா கபூரின் கணவரான சைப் அலி கான் மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த ஆண்டு தகராறில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. இதை தொடர்ந்து மும்பை கோர்ட்டில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து அவருக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப்பெற வேண்டும் என பத்ம விருது கமிட்டிக்கு சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அனுப்பினார்.

இது தொடர்பாக எந்த பதிலும் கிடைக்காததால், இந்த புகார் மீது எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை என்ன? என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு தற்போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, உணவகத்தில் சைப் அலி கான் தகராறு செய்தது தொடர்பான புகார் விபரங்களை உடனடியாக தெரிவிக்கும்படி மும்பை போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் சைப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கணித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராசிபுரம் அருகே கணவன் கண்முன் இளம்பெண் கற்பை சூறையாடிய 3 பேர் கைது!!
Next post கூட்டாக சேர்ந்து தன்னை கற்பழித்த கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்த 71 வயது கன்னியாஸ்திரி!!