புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் முடிவு

Read Time:1 Minute, 52 Second

Tamilnadu.1.jpgபுதுசேரியில் 5 நகரசபைக்கான தலைவர் தேர்தலில் 4 நகரசபைகளில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. காரைக்காலில் நகரசபை தலைவர் தேர்தலில் விஜயகாந்த் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெற்றிபெற்றுள்ளது.
புதுச்சேரியில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. ஜுன் 24,27 ஆகிய தேதிகளிலும், கடந்த 1-ந் தேதியும் ஆக 3 கட்டங்களாக வாக்கு பதிவு நடந்தது.

3 கட்ட தேர்தல்களிலும் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. உள்ளாட்சி தேர்தல் நடந்த 5 நகரசபை தலைவர்கள், மற்றும் கொம்ïன் பஞ்சாயத்துக்களுக்கான ஓட்டு எண்ணிக்கை 15 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

மாகி, ஏனாம், உழவர்கரை நகரசபைகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் நகரசபை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீதேவி வெற்றி பெற்றார்.

காரைக்காலில் தே.மு.தி.க வெற்றி – காரைக்காலில் நகரசபை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் ஆர்.பிரபாவதி தொடக்கம் முதலே முன்னிலை பெற்று இறுதியில் தி.மு.க. வேட்பாளரை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம் –2006
Next post லண்டன் தொடர் குண்டுவெடிப்பில் காரணம் சரி, செய்த காரியம்….