யானைகளால் கன்னி வெடியை கண்டறிய முடியும்: விஞ்ஞானிகள் தகவல்!!

Read Time:2 Minute, 6 Second

36073aa0-e81d-4f06-aae5-c076b18a3298_S_secvpfநிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கன்னி வெடிகளை யானைகள் தங்கள் மோப்ப சக்தியை பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக வெடிப்பொருட்களை கண்டறிவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்கள்தான் பயன்படுத்தப்படும். ஏனெனில், அவற்றை கண்டுபிடிக்கும் திறன் அதற்கு அதிகமாக காணப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா நாடான அங்கோலாவில் நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் தங்கள் காட்டிற்கு திரும்பியபோதுதான் யானைகளாலும் கன்னி வெடிகளை மோப்பம் பிடிக்க முடியும் என்பதை கண்டறிந்தார்கள்.

கன்னி வெடிகளை மறைத்து வைத்து யானைகளை கொண்டு கண்டுபிடிக்கும் சோதனையை தென் ஆப்பிரிக்காவின் வடக்கு தலைநகரான பிரிட்டேரியாவில் விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள். இதில் யானைகள் 96 சதவீதம் மிக சரியாக அசிட்டோன் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட பைகளை கண்டுப்பிடித்தன. இந்த பரிசோதனைகளுக்கு அமெரிக்க ராணுவம் பெரிய அளவில் நிதியுதவி செய்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க ராணுவ அதிகாரி கூறும்போது, யானைகளை போர் நடைபெறும் இடங்களில் பயன்படுத்தும் நோக்கம் இல்லை. ஆனால் அது பயன்படுத்தும் வழிமுறைகளை கண்டறிந்து அவற்றை நவீன சென்சார் தொழிற்நுட்பத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதுகில் கமெராவுடன் பறந்து உலக சாதனை படைத்த கழுகு: பிரமிக்க வைக்கும் துபாய் நகரம் (வீடியோ இணைப்பு)!!
Next post மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான தாய்–கள்ளக்காதலன் ஜெயிலில் அடைப்பு!!