தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன?: குலையுமா கூட்டமைப்பு? – செல்வரட்னம் சிறிதரன் (கட்டுரை)!!
தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகக் கருதப்படுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியும், அது தொடர்பான சிந்தனையும் இப்போது எழுந்திருக்கின்றது.
குறிப்பாக பொதுத் தேர்தல் ஒன்று தெரு முனையில் வந்து நின்று எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒரு கட்டமைப்பாக இருந்து தேர்தலுக்கு முகம் கொடுக்குமா?
இன்றைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகளில் அது சாத்தியமா? என்ற கேள்விகள் இயல்பாகவே தோற்றம் பெற்றிருக்கின்றன.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தையொட்டி, அதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும், அவருடைய விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல் ஒழுங்குகளை மேற்கொள்வதற்குமாக இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியம் மிகமிக முக்கியமானது, அவசியமானது என்று வலியுறுத்தியிருந்தார்.
கூட்டமைப்பிற்குள் ஐக்கியத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு மூத்த அரசியல்வாதியாகிய வயதான சம்பந்தன் அவர்களுக்கு இருக்கிறது.
அந்த ஐக்கியத்தை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அவர் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருந்தார்.
இரண்டாவதாக, ஐ.நா.வின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை, ஐ.நா. மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படாமல், வரும் செப்டெம்பர் மாதத்திற்குப் பின்போடப்பட்டிருப்பதையடுத்து, தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி நிலைமையும், குறிப்பாக உள்ளக விசாரணையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் எழுந்திருந்த சர்ச்சையும் அவற்றையொட்டி இடம்பெற்றிருந்த உருவப் படங்கள் மற்றும் உருவ பொம்மை எரிக்கப்பட்ட சம்பவங்களும் முக்கியம் பெற்று, கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.
தீவிரவாத வழியில் சென்று, பின்னர் ஜனநாயக வழிக்குத் திரும்பிய ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளும், மிதவாத அரசியல் கட்சிகளாகிய இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ்க்காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பங்காளிகளாக அங்கம் வகித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்போது நான்கு கட்சிகளே மிஞ்சியிருக்கின்றன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில், செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ்க் காங்கிரஸ் விலகியது. பின்னர் புளொட் அமைப்பு கூட்டமைப்பில் இணைந்து கொண்டது.
இதனையடுத்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய ஐந்து கட்சிகள் இணைந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி, இருந்தும் இல்லாதது போன்றதொரு நிலையிலேயே காணப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அந்தக் கட்சி விலகி இருக்கின்றதா அல்லது விலக்கப்பட்டிருக்கின்றதா அன்றேல் விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றதா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.
இந்த விடயம் குறித்த உண்மையான நிலைப்பாடு என்ன என்பது இன்னும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
எனவே, இத்தகைய ஒரு நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களாலும், கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகளினாலும் நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால், கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த விடயத்தில் இன்னும் முன்னேற்றம் காணப்படாத ஒரு நிலைமையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் பங்காளிக் கட்சிகள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி, காலத்தைக் கடத்தி வந்திருக்கின்றனவே தவிர, சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையை முன்னெடுத்து அதனையோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அச்சம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெறும் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டதேயல்லாமல், அது, இறுக்கமான ஓர் அரசியல் கட்சியாக கட்டமைக்கப்படவுமில்லை. உருவாக்கப்படவுமில்லை.
இதனால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னமே கூட்டமைப்பின் தேர்தல் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.
கூட்டமைப்புக்குத் தனியான கொடி உருவாக்கப்படவில்லை. அதேபோன்று அதற்கான இலச்சினை ஒன்றும் கூட வடிவமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் அது தமிழரசுக் கடசியின் தயவில் பெயரளவில் செயற்பட்டு வந்தது, செயற்பட்டு வந்து கொண்டிருக்கின்றது.
கூட்டமைப்பு பெயரளவில்தான் செயற்படுகின்றதென்று கூறினாலும், அது உத்தியோகபூர்வமற்ற நிலையில் உள்ளூரிலும், சர்வதேச அளவிலும், தமிழ் மக்களின் அரசியல் அமைப்பாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. அங்கீகாரம் பெற்றிருக்கின்றது.
சட்டரீதியாகப் பார்த்தால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றார்கள்.
இதேபோன்றுதான் பிரதேச சபைகள், நகரசபைகள், மாநகரசபைகள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாகாண சபைகளிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றார்கள்.
தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்காகத் தெரிவு செய்யப்படுகின்ற வேட்பாளர்கள் யார் என்பதை இறுதியாக முடிவு செய்கின்ற வல்லமையும் அதிகாரமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடமே இருக்கின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் போட்டியிடுவதனால், வேட்பாளர் பட்டியலில் தமிழரசுக் கட்சியின் செயலாளரே, இவர்கள்தான் வேட்பாளர்கள் என்று உறுதிப்படுத்தி கையெழுத்திடுகின்றார்.
இதனால் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தயவில், இறுதி தீர்மானத்தில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
இதன் காரணமாகத்தான், தமிழரசுக் கட்சியின் தலைமை மனம் கோணாத வகையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் மிகவும் நிதானமாக நடந்துகொள்கின்ற போக்கினைக் காண முடிகின்றது.
இந்த நிலைமைக்கு விதிவிலக்காக ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினர், கூட்டமைப்பின் பதிவு விடயத்தில் உரத்து குரல் கொடுத்து வருகின்றனர். கூட்டமைப்பின் பதிவு விடயத்தில் காரசாரமான கருத்துக்களும், விமர்சனங்களும் கூட வெளிவந்திருக்கின்றன.
ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதில் முழு அளவில் உடன்பாடு இல்லாத ஒரு போக்கினையே இலங்கைத் தமிழரசுக் கட்சி இதுகால வரையிலும் கடைப்பிடித்து வந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்தால், இலங்கைத் தமிழரசுக் கட்சி செல்வாக்கு இழந்துவிடும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது பழம்பெரும் கட்சி. தந்தை செல்வாவினால் கட்டி வளர்க்கப்பட்ட பெருமைக்குரிய கட்சி. அது அந்தக் காலத்தில் பல அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
ஆயுத ரீதியான போராட்டங்கள் தோல்வியடையச் செய்ததன் பின்னர் எழுந்துள்ள அரசியல் சூழலில் மென்வாத அரசியல் போக்கில் தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தலைமையை வழங்கி வழிநடத்திச்செல்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியே பொருத்தமானது, சரியானது என்பது தமிழரசுக் கட்சியினரின் எண்ணமாக, முடிவான தீர்மானமாக இருக்கின்றது.
இதன் காரணமாகத்தான் தமிழரசுக் கட்சியை மக்கள் மத்தியில் வலுவான ஓர் அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஆவலை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சட்டரீதியாகக் கையாள்கின்ற வலிமை தமிழரசுக் கட்சியிடமே இருக்கின்றது.
இந்த அதிகார பலம் அல்லது அதிகாரம் வாய்ந்த ஆற்றல், தமிழரசுக் கட்சியிடம் இருப்பதுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓரங்கட்டி, இலங்கைத் தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அந்தக் கட்சியினருடைய விருப்பத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உரத்து எழும்போதெல்லாம், அல்லது அதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கின்ற போதெல்லாம், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், அல்லது உரிய காலத்தில் அது பதிவு செய்யப்படும் என்றெல்லாம் தமிழரசுக் கட்சியின் தலைமையிடமிருந்து உத்தரவாதப் பதில் வரும்.
கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டங்களில் இந்த விடயம் விவாதிக்கப்படும்போது, இந்த விடயம் குறித்து தமிழரசுக் கட்சிக்குள் கலந்து பேசப்படும், பேசிய பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வகையிலான பதிலும் பல தடவைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான தட்டிக்கழிப்பு போக்குகளுக்கு மத்தியில் அந்த விடயத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்றும் கூட நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் குழு இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு தீர்மானம்
இத்தகையதொரு பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு வவுனியாவில் கூடியது. இறுக்கி மூடிய கதவுகளுக்குள் கூடிப் பேசிய இந்தக்குழு பல விடயங்கள் குறித்து ஆராய்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் மக்களின் காணிளை மீள கையளித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், காணாமல் போனவர்கள் சம்பந்தமான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு, தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி, உடனடியாக இவை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசு தாமதமின்றி, உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என இந்த மத்தியகுழு அரசை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
அதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின், மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்திய செயற்குழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்றது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
21.2.55தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கும் எமது கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் எதிரான நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளை ஈழத் தாயகத்திலும், புலத்திலும் நிகழ்த்தியுள்ள விடயங்களை இந்த மத்தியகுழு கண்டிக்கின்றது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் காணாமல் போனோரின் உண்மை நிலையைத் தெளிவுபடுத்துமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், ஐ.நா.விசாரணை அறிக்கையை தாமதமின்றி சமர்ப்பிக்குமாறும் கோரி நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது…..,
21.2.56அந்தப் போராட்டத்துடன் எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டிராததும், அதுவரையில் எந்த விதத்திலும் உச்சரிக்கப்பட்டிருக்காததுமான விடயமான பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய உருவப் பொம்மை எரிக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக இணைந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சுரேஷ் அணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி துணைச் செயலாளர் அனந்தி சசிதரனும் துணை போயிருந்ததாக, இந்த மத்தியகுழு கூட்டம் குற்றம் சுமத்தியிருந்தது.
அவர்களுடைய இந்தச் செயற்பாடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அந்த மத்தியகுழு தெரிவித்திருந்தது.
அது மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பொறுப்பை பொறுப்பில்லாமல் பயன்படுத்தி பெருந்தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகத் தொடர்ச்சியாக, அவர் கருத்துக்களைத் தெரிவித்து வருவதைக் கண்டிப்பதுடன், அவர்மீது தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் யாவும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டிருந்தன. அதேவேளை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நடத்திய இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை ஏற்கனவே திட்டமிட்டபடி, மார்ச் மாதக் கூட்ட அமர்வில் சமர்ப்பிக்கப்படாமல், செப்டெம்பர் மாதத்திற்குப் பின்போடப்பட்டமை தொடர்பில் உண்மை நிலைமை என்ன, அதன் பலாபலன்கள் என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், இந்த மத்தியகுழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்திருந்த அறிக்கையும் ஊடகங்களில் வெளிவந்திருந்தது.
ஆனால், இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அல்லது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானிக்கப்பட்ட ஒரு விடயம் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படமாட்டாது என்பதே அந்தத் தீர்மானமாகும்.
கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் எழுந்த ஒரேயொரு குரலும், அதிகாரப் பார்வையின் மூலம் அடக்கப்பட்டு, கூட்டமைப்பைப் பதிவு செய்வதில்லை என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் கசிந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கு, தமிழரசுக் கட்சியினர் விரும்பவில்லை என்ற விடயம் ஏற்கனவே பலரும் அறிந்த ஒன்றாகும்.
ஆனால், வேறு பல முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்ட அந்தக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் அந்த நிலைப்பாடு ஒரு தீர்மானமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியதாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடைய உருவப் படங்கள் மற்றும் உருவப் பொம்மை எரியூட்டப்பட்ட சம்பவமானது, கூட்டமைப்பின் ஒற்றுமையை, கேள்விக்குறிக்கு உள்ளாக்கியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்ட அதே கூட்டத்தில் கூட்டமைப்பு பதிவு செய்யப்படமாட்டாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருப்பதும் சாதாரண விடயமல்ல.
இந்தப் பின்னணியிலேயே, இலங்கைக்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியம் குறித்து வலியுறுத்தியிருக்கின்றார்.
அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைச் சந்தித்துப் பேசிய போது, இந்தி யப் பிரதமரின் வருகையோடு தொடர்பு டையதாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.
பல விடயங்கள் குறித்து தமிழ்த் தலைவர்கள் அவருக்கு எடுத்துக் கூறியிருந்தனர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியம் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட் டிருந்தார்.
இதனை, அவர் சாதாரண விடயமாகக் குறிப்பிடாமல், அதற்கு அழுத்தம் கொடு த்து, கருத்து வெளியிட்டிருப்பது முக்கிய மானது. அது தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் எதிர்காலம் குறித்த பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி யிருக்கின்றது.
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஐக்கியம் மிக மிக முக்கியமானது. எனவே, கூட்டமைப்பிற்குள் ஐக்கியத்தை நிலை நிறுத்துவதில், பெரும்பங்கு மூத்த அரசி யல்வாதியாகிய ஆர்.சம்பந்தனுக்கு இருக் கின்றது.
அந்த ஐக்கியம் தான் உங்களுக் கான விடுதலை என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே, அந்த ஐக்கி யத்தை பேணிப் பாதுகாப்பதற்கான நட வடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியிருக்கின்றார்.
அதேநேரம், கூட் டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்சி அதற்குள் பல்வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் என்று ஆர்.சம்பந்தன் அதற்குப் பதிலளித்துள் ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியம் அதன் செயற்பாடுகள் என்பன ஓர் உள்ளக விடயம். ஒரு சில அரசியல் கட்சிகளினதும், அவை சார்ந்த ஒரு சமூகத்தைச் சார்ந்த விவகாரமாகும்.
இதற்கு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் அழுத்தம் கொடுத்து, அதன் ஐக்கியம் பேணப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என கூறியிருப்பது சிந்த னைக்குரிய விடயமாகும்.
இதனை கூட்டமைப்பில் இணைந்துள்ள தலைவர்கள், குறிப்பாக தமிழரசுக் கட்சி யினரும், தமிழ் மக்களும் தீவிர கவனத்திற் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
Average Rating