காதல் விவகாரத்தில் பெற்ற தந்தை மீதே வீண் பழி சுமத்துகிறார்: பெண் டாக்டரின் தாய் கண்ணீர் பேட்டி!!

Read Time:2 Minute, 45 Second

09aa2f10-b0f0-4047-801c-f39fb092f6ec_S_secvpfநெல்லை மனநல காப்பகத்தில் இருந்து இன்று காலை பெண் டாக்டர் சாந்தினி மீட்கப்பட்டதாக தகவல் அறிந்ததும் சாந்தினியின் தாய் வசந்தா நெல்லை வந்தார். அவர் கண்ணீர் விட்டு கதறியபடி நிருபர்களிடம் கூறியதாவது:–

எனது கணவர் மகள் மீது அதிக பாசம் வைத்திருந்தார். ஒருபோதும் அவர் தவறான செயலில் ஈடுபட்டது கிடையாது. அவளை நன்றாக வளர்த்து டாக்டருக்கு படிக்க வைத்தோம். பின்னர் அவள் சென்னையில் டாக்டர் தினேஷ் என்பவரது மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் எனது மகளுக்கு திருமணத்துக்காக மாப்பிள்ளை பார்த்தோம். அதற்கு அவள் வேண்டாம் என கூறிவிட்டாள். தனது மருத்துவமனை டாக்டர் தினேசை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்வேன் எனவும் அவள் கூறினாள்.

டாக்டர் தினேஷ் ஏற்கனவே திருமணமானவர். 12 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் அவரை காதலிப்பது தவறு என சாந்தினியிடம் நாங்கள் கூறினோம். இதை அறிந்த தினேசின் ஆட்கள் சென்னையில் வைத்து எங்களை கொல்ல முயன்றனர்.

இந்த பிரச்சினைக்காக நாங்கள் குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடி சண்முகாபுரத்துக்கு வந்துவிட்டோம். அதன்பிறகும் எனது மகளை திருமணம் செய்து எங்கள் சொத்தை அபகரிக்க டாக்டர் தினேஷ் திட்டமிட்டார். எனது மகளை அவர் மனோ வசியப்படுத்திவிட்டார். இதனாலேயே எனது மகள் தற்கொலைக்கு முயன்றார். அவளை மருத்துவமனையில் சேர்த்து குணப்படுத்தினோம்.

மனதளவில் பாதிக்கப்பட்ட எனது மகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காகவே அவளை நெல்லை மன நல காப்பக விடுதியில் வார்டனாக சேர்த்தோம். அவரை கடத்தி செல்ல வேண்டும் என்பதற்காக டாக்டர் தினேஷ் திட்டமிட்டு தோழி என்ற பெயரில் ஒரு பெண்ணை அழைத்து வந்து காரியத்தை நடத்தியுள்ளார். எனது கணவர் மீது பொய்யான குற்றசாட்டுகளை கூறி எனது மகளை கடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகாலாந்து சம்பவத்தில் திடீர் திருப்பம்: நடந்தது கற்பழிப்பு அல்ல -மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை!!
Next post தவறாக நடக்க முயன்ற தந்தை மீது நடவடிக்கை எடுங்கள்: பெண் டாக்டர் எழுதியுள்ள கடிதத்தில் பரபரப்பு தகவல்!!