புதுவையில் ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டுடன் விபசார அழகி சிக்கினார்!!

Read Time:2 Minute, 16 Second

22363af5-07a5-4d43-ba9c-c27201e58148_S_secvpfகொல்கத்தாவை சேர்ந்த விபசார அழகி தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுவை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விபசார தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.

தேவி வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த அய்யனார் (வயது 40) என்பவருடைய வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அய்யனாரிடம் ரூ.40 ஆயிரம் பணத்தை கொடுத்து மிஷன் வீதியில் உள்ள பாங்கி ஒன்றில் தனது கணக்கில் செலுத்தும்படி கூறி அனுப்பி வைத்தார்.

அதன்படி அய்யனார் பாங்கியில் பணத்தை செலுத்தினார். பணத்தை எண்ணி பார்த்த வங்கி கேஷியர் அதில் 21 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தார். ஆயிரம் ரூபாய் 10 நோட்டுகளும், 500 ரூபாய் 12 நோட்டுகளும் அதில் இருந்தன.

இதுபற்றி அவர் பாங்கி மானேஜருக்கு தகவல் தெரிவித்தார். அவர் பெரியகடை போலீசில் இதுபற்றி புகார் கூறினார். அதையடுத்து போலீசார் அய்யனாரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது தேவி பணத்தை கொடுத்து அனுப்பிய விஷயத்தை கூறினார்.

உடனே போலீசார் தேவியை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற வாடிக்கையாளர் இந்த பணத்தை கொடுத்தார் என்று கூறினார். இது கள்ளநோட்டு என்று தெரியாமல் வாங்கிவிட்டேன். அவர் என்னை ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சுரேசை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மத்திய புலனாய்வு படைக்கும் கள்ள நோட்டு பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாலி பிரச்சினையால் திருமணம் நடந்தது: வீட்டை விட்டு வெளியேறி மாலை மாற்றிய ஜோடி!!
Next post போலி ஆவணம் தயாரித்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை விற்க முயன்ற 2 பேர் கைது!!