ஷெராவத் படத்துக்கு தடை விதிக்க கோரிக்கை…!!
சட்டசபை முன் கவர்ச்சி போஸ் கொடுத்த மல்லிகா ஷெராவத் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்திப்பட டைரக்டர் கே.சி.பொகாடியா, ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ (அழுக்கு அரசியல்) என்ற பெயரில் சினிமா படம் எடுத்துள்ளார்.
ராஜஸ்தானில் 2011–ம் ஆண்டு நடந்த பன்வாரி தேவி படுகொலையை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பன்வாரி தேவி கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது. முன்னாள் காங்கிரஸ் மந்திரி மகிபால் மடெர்னா, முன்னாள் எம்.எல்.ஏ. மால்கன் சிங் ஆகியோர் இந்த கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளனர். இந்த இரு அரசியல்வாதிகளும் தன்னுடன் உல்லாசமாக இருந்த போது அதை வீடியோ எடுத்து வைத்து இருந்தார். அந்த வீடியோவை கைப்பற்றும் முயற்சியில் பன்வாரி தேவி கொலை செய்யப்பட்டார்.
‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்தில் பன்வாரி தேவியாக கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் வருகிறார். நடிகர்கள் ஓம்பூரி, நசிருதீன்ஷா அனுபம் கேர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டரில் ராஜஸ்தான் மாநில சட்டசபை கட்டிடம் இடம் பெற்றுள்ளது. அதன்முன் சிவப்பு விளக்கு பொருத்திய காரின் மீது நடிகை மல்லிகா ஷெராவத் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக அமர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டருக்கு ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சட்டசபை கட்டிடத்தையும் சட்டசபை உறுப்பினர்களையும் இழிவுபடுத்த ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டசபை முன் மல்லிகா ஷெராவத் ஆபாசமாக அமர்ந்து இருக்கும் படம் சட்டசபையின் கன்னியத்தை குறைப்பதாக உள்ளது. இந்த பிரச்சினையை சட்ட சபையில் கிளப்புவோம் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம்லால் சர்மா ஆவேசத்துடன் கூறினார்.
ராஜஸ்தான் எம்.பி.யும், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரியுமான ராஜேந்திர ரதோர் கூறுகையில் இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இந்தப் படம் மாநிலத்தின் மரியாதைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி முதல்–மந்திரி கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் ரதோர் கூறினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating