டெல்லியில் இரண்டே மாதங்களில் 291 கற்பழிப்பு வழக்குகள்: பாராளுமன்றத்தில் தகவல்!!

Read Time:1 Minute, 40 Second

b25fcc51-2140-4daa-805f-0a7284165765_S_secvpfநாட்டின் தலைநகராக விளங்கும் டெல்லியில் கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மட்டும் 291 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற மேல்சபையில் இன்று உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி, கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மட்டும் 291 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 662 வழக்குகளும், பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக நடந்து கொண்டவர்களுக்கு எதிராக 212 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மந்திரி குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 19 வரதட்சணை இறப்புகளும், மாமியார் மற்றும் கணவரால் வரதட்சணை தொடர்பாக சித்ரவதை செய்யப்பட்டதாக 483 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 706 ஆக கற்பழிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 2013-ல் 1,636 ஆகவும், 2014-ல் 2,166 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வளவனூர் அருகே தீக்குளித்த தாயை கட்டிப்பிடித்த 2 வயது குழந்தை கருகி சாவு: மற்றொரு குழந்தை படுகாயம்!!
Next post ஆபாச போஸ் கொடுத்ததால் இவர் கைது ஆவாரா?