ஓடும் ரெயிலில் இருந்து 4 மாத பெண் குழந்தையை தூக்கி வீசிய கொலைகார தாய்: குழந்தை உயிர் பிழைத்தது!!

Read Time:1 Minute, 39 Second

81dae5e3-9dfc-4dc7-b142-204a09de37b5_S_secvpfஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பெற்ற தாயால் தூக்கி வீசப்பட்ட 4 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள அகோரா பகுதி வழியாக நேற்று ஹாட்டியா-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றபோது அதில் பயணித்த ஒரு பெண் ஏதோ ஒரு பெட்டியை ரெயிலில் இருந்து வெளியே வீசினாள்.

ராஞ்சி புறநகர் பகுதியில் சாலையோரத்தில் டீக்கடை நடத்திவரும் தனது மகனின் கடை அருகே நின்றிருந்த ஹாசரா பர்வீன் காத்தூன் என்ற பெண், ரெயிலில் இருந்து வீசப்பட்ட பெட்டியினுள் ஒரு குழந்தை இருந்ததை கவனித்து விட்டார். ஓடோடி சென்ற அந்த பெண் கீழே புல்தரையின் மீது விழுந்து கிடந்த குழந்தையை தூக்கினார்.

உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்று பரிசோதித்தபோது, அதிர்ஷ்டவசமாக ஒரு கையின் எலும்பு மட்டும் முறிந்த நிலையில் அந்த பெண் குழந்தை உயிர் பிழைத்தது. தற்போது, ராஞ்சியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திடம் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2013-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1.34 லட்சம்: மந்திரி தகவல்!!
Next post இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது!!