பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1500-ஐ எட்டியது: 26 ஆயிரம் பேருக்கு நோய் தாக்கம்!!

Read Time:3 Minute, 7 Second

300736f1-4221-446a-b73a-871682f6cd63_S_secvpfகாலனின் வடிவில் வந்து இந்தியர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,482 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 26,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

இந்நோய்க்கு நாடு முழுவதும் 26455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1482 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 347 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 343 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 221 பேரும், மராட்டியத்தில் 201 பேரும் பலியாகியுள்ளனர்.

பாராளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக முன்னர் விளக்கம் அளித்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கத்தை கண்டறிவதற்காக நாடு முழுவதும் 21 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை போதாது. அனைத்து மாநிலங்களிலும் இதற்கான தனி ஆய்வகங்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.

பன்றிக்காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை. இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வும் மக்களுக்கு தேவை. வெறும் தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டும் பன்றிக்காய்ச்சல் தாக்காது என்று இருந்து விடக்கூடாது. முகமூடி அணிவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வது உள்ளிட்ட தனிநபர் சுகாதாரமும் மிகவும் அவசியமானது.

நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என தெரிவித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கிராமங்களுக்கு 1 லட்சம் ரூபாய்: முதல் மந்திரி அறிவிப்பு!!
Next post உ.பி.யில் காட்டு மிராண்டித்தனம்: முதிய தம்பதியர் துடிதுடிக்க சுட்டுக்கொலை!!