கோவையில் பிடிபட்ட கள்ளக்காதலி காப்பகத்தில் இருந்து தப்பி ஓட்டம்!!

Read Time:2 Minute, 16 Second

4ea88091-bb17-473d-96f9-64e4c64ae73f_S_secvpfதேனி மாவட்டம் அம்பாசமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார்(வயது 38). இவருக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி லட்சுமி (35)க்கும், குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக வெளியே தெரிய வரவே இருவீட்டாரும் கண்டித்தனர். ‘ஒழுக்கமாக இருக்கும் வழியைப்பாருங்கள்’ என்று எச்சரித்தனர்.

எதிர்ப்பு வலுத்ததால் கள்ளக்காதல் ஜோடியால் சந்திக்க முடியவில்லை. எனவே இருவரும் ஊரை காலி செய்ய முடிவு செய்தனர்.

தங்களது திட்டப்படி இருவரும் கோவைக்கு வந்து சேர்ந்தனர். இங்கு பீளமேட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இந்த நிலையில் லட்சுமியை காணவில்லை என்று அவரது உறவினர்கள் கண்டமனூர் போலீசில் புகார் செய்தனர்.

அவர்கள் ‘மாயம்’ என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தீவிர விசாரணையில் லட்சுமி தனது கள்ளக்காதலுடன் கோவைக்கு வந்த தகவல் தெரியவந்தது. எனவே போலீசார் பீளமேடு வந்தனர்.

கள்ளக்காதல் ஜோடி தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த சமயத்தில் குமார் தப்பி விட்டார். வீட்டில் இருந்த லட்சுமியை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். பின்னர் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே இன்று காலை 6 மணி அளவில் காப்பகத்தில் தங்கியிருந்த லட்சுமி காப்பக நிர்வாகிகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி விட்டார். தலைமறைவான லட்சுமியை போலீசார் தேடிவருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேடவாக்கம் ஏரியில் வடமாநில வாலிபர் கல்லால் அடித்து கொலை!!
Next post வேறு ஒரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய கணவர் முயற்சி: திருநங்கை கண்ணீர் புகார்!!