டெல்லியில் தொடரும் வெட்கக்கேடு: இரண்டு மாதத்தில் மட்டும் 300 பேர் கற்பழிப்பு!!

Read Time:2 Minute, 37 Second

4c74597e-a5fb-43ab-9a17-6e16ae37ccda_S_secvpfநாட்டின் தலைநகரான டெல்லியில் நடைபெறும் சம்பவங்கள், உலக அரங்கில் நம்மை தொடர்ந்து தலைகுனிய வைக்கிறது. நாள்தோறும் கற்பழிப்பு, கொலை என அடுத்தடுத்து அங்கு நடைபெறும் சம்பவங்கள் தான் இதற்கு காரணம். அந்த வகையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் அங்கு 300 பேர் கற்பழிக்கப்பட்டுள்ளனர். மானபங்கப்படுத்தப்பட்டதாக 500 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கு முன் கற்பழிப்பு புகார்களை அளிக்க பெண்கள் தயங்கி வந்த நிலையில், தற்போது துணிச்சலாக புகார் அளித்து வருகின்றனர். எனவே இது ஒரு நல்ல அறிகுறி என காவல்துறை காரணம் கூறியுள்ளது. கடந்த டிசம்பர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்திற்கு பின், சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் பெண்களிடம் சமூகத்தின் மீதான தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே கடந்த 2013 ஆம் ஆண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை விட தற்போது 300 முதல் 400 சதவீத வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும், 2013-ல் 1571 கற்பழிப்பு வழக்குகளும், 2014-ல் 2069 கற்பழிப்பு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாலியல் தொல்லை தொடர்பான 4179 வழக்குகளில் 67.17 சதவீத வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் கூறியுள்ளது.

96 சதவீத கற்பழிப்பு சம்பவங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அப்பெண்ணின் குடும்பத்திற்கு அறிமுகமானவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளதும், வெறும் 4 சதவீத சற்பழிப்பு சம்பவங்கள் அந்நிய நபர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளதும் காவல்துறையின் தகவல்களை மூலம் அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன உளைச்சலால் தினம்தினம் நரக வேதனையை அனுபவிக்கிறேன்: உபேர் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்!!
Next post கற்பழிப்பு குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட வேண்டும்: பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ பேச்சு!!