குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டம்-ஜெனிலியா!!

Read Time:2 Minute, 0 Second

bc5ccfed-01ee-47b6-a46c-7e574f137716_S_secvpfகுழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டமான விஷயம் என்று ஜெனிலியா கூறினார். இது குறித்து நடிகை ஜெனிலியா அளித்த பேட்டி வருமாறு:–

ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகு எனக்குள் நிறைய மாற்றம். குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது எவ்வளவு கஷ்டமானது என்று இப்போதுதான் புரிந்தது. இதன் மூலம் என் தாய் மேல் எனக்கு நிறைய மரியாதை ஏற்பட்டது.

என்னை பெற்று எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து இருப்பார் என்று புரிந்து கொண்டேன்.

குழந்தைகளை பெற்று வளர்ப்பதில் கஷ்டமும் இருக்கிறது. சந்தோஷமும் இருக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் மீதெல்லாம் எனக்கு மரியாதை ஏற்படுகிறது.

நிறைய பெண்கள் குழந்தைகளை கவனிப்பதோடு வேலைக்கும் செல்கிறார்கள். அவர்கள் நிலைமைகளை பார்க்கும் போது பரிதாபம் ஏற்படுகிறது. அப்பாக்கள் வேலைக்கு போய் விடுவதால் மனைவி, குழந்தைகள் மேல் பற்று இல்லாமல் போய் விடுகிறது. எனவே பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிப்பது போல ஆண்களுக்கும் மனைவி, குழந்தைகளோடு செலவிட விசேஷ விடுமுறைகள் அளிக்க வேண்டும்.

திருமணத்துக்கு பிறகு மனைவியாக, கர்ப்பிணியாக, தாயாக வாழ்ந்து நிறைய அனுபவங்கள் பெற்று விட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் மன நிலைக்கு வந்துள்ளேன். விரைவில் படத்தில் நடிப்பேன்.

இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர வைத்த நடிகை!!
Next post கமர்ஷியல் படமாக உருவாகும் எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது!!