கொல்லத்தில் சாலை ஓரத்தில் காதலியுடன் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காரில் உல்லாசம்!!

Read Time:4 Minute, 4 Second

4ce05267-b979-442a-be09-13f3424124e5_S_secvpfகேரள மாநிலம் கொல்லம் தாலுகா அலுவலகம் சாலையில் ஒரு மரத்தின் கீழே சொகுசு கார் ஒன்று நேற்று பகல் 1.30 மணி அளவில் நின்று கொண்டிருந்தது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கண்ணாடிகள் மூடப்பட்ட நிலையில் அந்த கார் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததாலும் அந்த கார் அசைந்தபடி இருந்ததாலும் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அந்த காரை சில வாலிபர்கள் அருகில் சென்று நோட்டமிட்டனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த காரின் பின் சீட்டில் ஒரு வாலிபரும், இளம் பெண்ணும் உல்லாசத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

உடனே அவர்கள் இது பற்றி கட்டுப்பாட்டு அறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை சப்–இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், ஏட்டு ரெதீஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் காரில் இருந்தவர்களை வெளியே வரும்படி கூறி காரின் கண்ணாடிகளை தட்டினர். அப்போது அந்த காரின் பின் சீட்டில் இருந்த வாலிபர் ஒருவர் மின்னல் வேகத்தில் முன் சீட்டுக்கு பாய்ந்து சென்று காரை வேகமாக ஓட்டிச்சென்றார். இதை பார்த்ததும் போலீசார் விலகி கொண்டதால் உயிர் தப்பினர்.

போலீசாரின் மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியபடி அந்த கார் சாலையில் பாய்ந்து சென்றது. உடனே போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் இது பற்றிய தகவலை தெரிவித்தனர். அந்த காரின் நம்பர் மற்றும் கலரை தெரிவித்து அதை மடக்கி பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

கொல்லத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகே அந்த கார் சென்று கொண்டிருந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் அந்த காரை அடையாளம் கண்டு மடக்கி பிடித்தார்.

மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அங்கு வந்தனர். அந்த காரில் ஒரு வாலிபர் மட்டும் இருந்தார். அவரிடம் விசாரித்த போது அவரது பெயர் ஆகாஷ் என்பதும் கொல்லத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படிப்பதும் தெரிய வந்தது.

காரில் இருந்த பெண் பற்றி போலீசார் விசாரித்த போது அந்த பெண் தன்னுடன் படிக்கும் மாணவி. நாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் போலீசார் விரட்டி வந்ததால் அந்த மாணவியை அவரது வீட்டில் விட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து மாணவர் ஆகாசை போலீசார் கைது செய்தனர். அவர் பயணம் செய்த சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பொது இடத்தில் காதலியுடன் காரில் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவர் போலீசில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐதராபாத்தில் இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த 4 வாலிபர்கள் கைது!!
Next post அன்னூர் அருகே இரும்பு வியாபாரி கொலையில் நண்பருடன் 4 பேர் சிக்கினர்!!