ஐதராபாத்தில் இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த 4 வாலிபர்கள் கைது!!

Read Time:2 Minute, 27 Second

3798e2b2-10b0-428f-9b40-d5ccfff59faa_S_secvpfஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் வெண்துர்த்தி பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு வந்து இருந்தார். விழா முடிந்து ஊருக்கு திரும்ப பஸ்நிலையம் வந்தார்.

அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணுக்கு உதவுவதுபோல பேசி காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

பின்னர் வெண்துருத்தியில் உள்ள சுற்றுலா விடுதியில் அடைத்து இரவு 9 மணி முதல் அதிகாலை வரை மாறி மாறி கற்பழித்தனர். இதில் அந்த பெண் சுயநினைவு இழந்தார். பின்னர் காரில் தூக்கி வந்து அவளை ரோட்டில் வீசிவிட்டு தப்பி விட்டனர்.

அப்போது 4 பேரில் ஒரு வாலிபர் அந்த பெண்ணை மீண்டும் மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு இவளது செல்போன் நம்பரை தனது செல்போனுக்கு பதிவு செய்து கொண்டார்.

சுயநினைவு திரும்பிய இளம்பெண் உடனே செல்போனில் தனது பெற்றோருக்கு தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார்.

உடனே அவர்கள் வெண்துருத்தி வந்து மகளை மீட்டு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனில் பதிவு செய்த நம்பரை வைத்து கற்பழிப்பு கும்பல் 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

கைதான சிவசேகர், கிரண், மணிகண்டன், சந்துரு ஆகிய 4 பேர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் சிவகுமார்தான் பெண்ணின் செல்போனில் இருந்து அவரது நம்பரை தனது செல்போனில் மிஸ்டுகால் மூலம் பதிவு செய்து கொண்டார். பெண்ணை மிரட்டி மீண்டும் தங்களது காமபசிக்கு இரையாக்கும் எண்ணத்தில் இவ்வாறு நம்பரை பெற்று உள்ளார். ஆனால் அதுவே அவர்கள் சிக்கிக்கொள்ள காரணமாக அமைந்து விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கத்திமுனையில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: பக்கத்து வீட்டுக்காரர் சிறையில் அடைப்பு!!
Next post கொல்லத்தில் சாலை ஓரத்தில் காதலியுடன் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காரில் உல்லாசம்!!