கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த காதலன்: போலீசில் புகார்!!

Read Time:2 Minute, 31 Second

85a93eb9-9b53-459f-aa02-77870e9a8416_S_secvpfஅரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாலாஜா தாலுகா கடப்பேரி கிராம பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது,

நான் கடப்பேரி பகுதியில் வசித்து வருகிறேன். காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 3–ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். என்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் கடப்பேரியை சேர்ந்த 20 வயது மாணவர் கடந்த 3 ஆண்டுகளாக என்னை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் கூறியதால் அவருடன் நான் உல்லாசமாக இருந்தேன். தற்போது நான் 5 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.

என்னை காதலித்தவரை கடந்த மாதம் 26–ந் தேதி நான் சந்தித்து எனது நிலையை விளக்கினேன். உடனடியாக என்னை திருமணம் செய்து கொள்ளும்படியாக கேட்டேன். ஆனால் என்னை கர்ப்பிணியாக்கிய அவர் ‘‘உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வெளியே சொன்னாலோ, வற்புறுத்தினாலோ என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது. உன்னை தொலைத்து விடுவேன். இனிமேல் என்னை வந்து பார்க்காதே’’ என துரத்தி விட்டான்.

என்னை திருமணம் செய்து கொள்ளாதபடி எனது காதலரின் குடும்பத்தினர் 6 பேர் அவருக்கு உடந்தையாக உள்ளனர். ஆகவே எனது காதலர் மீதும், அவரது குடும்பத்தார் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் அந்த மாணவி குறிப்பிட்டு இருந்தார்.

புகார் மனுவை பெற்று கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கல்லூரி மாணவியின் காதலன் மீதும், அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கள் மீதும், மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு வற்புறுத்தியதால் வாலிபர் தற்கொலை!!
Next post நெல்லையில் ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை!!