திருப்பதி கோவிலில் பக்தர்கள் தலைமுடி ரூ.19 கோடிக்கு ஏலம்!!

Read Time:1 Minute, 28 Second

b931af36-3ed8-45ca-af06-f12ed990c9b0_S_secvpfதிருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தலைமுடி மலைபோல் குவிந்து கிடக்கிறது.

தலைமுடிக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. அவ்வப்போது இ–ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கோவிலில் தேங்கியுள்ள 2.55 லட்சம் கிலோ தலைமுடி 6 ரகங்களாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

முதல் ரகத்தில் 700 கிலோவும், 3–வது ரகத்தில் 500 கிலோவும் ஏலம் போனது. 100 கிலோ வெள்ளை முடியும் ஏலம் போனது. இதன் மூலம் கோவிலுக்கு ரூ.19 கோடி வருமானம் கிடைத்தது.

2–வது, 4–வது, 5–வது ரக தலைமுடிக்கு கிராக்கி இல்லாததால் அவைகள் விற்பனையாகவில்லை. இதற்கு முன்பு நடந்த ஏலத்திலும் இந்த ரகம் விற்பனையாகவில்லை.

2014–15–ம் ஆண்டில் தலைமுடி ஏலம் மூலம் ரூ.200 கோடி வருவாய் ஈட்ட தேவஸ்தானம் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில் இதுவரை ரூ.171.2 கோடி கிடைத்து உள்ளது.

எஞ்சிய நாட்களில் விடப்படும் ஏலம் மூலம் இலக்கை எட்டி விடுவோம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் மனைவியை கொன்ற தொழிலாளி போலீஸ் ஜீப் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி!!
Next post அஞ்சுகிராமம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை!!