கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை: இயக்குனர் அலுவலகம் உத்தரவு!!

Read Time:1 Minute, 46 Second

4faee303-96bc-4bf9-859f-ae02f48e8394_S_secvpfஎன்ஜினீயரிங் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் அழகிப் போட்டி, ஆணழகன் போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டு இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கல்லூரிகளில் ஆணழகன் போட்டி, அழகிப் போட்டி நடத்த இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தனர்.

கலாச்சார நிகழ்ச்சிகள் மாணவர்களின் திறமையை வெளி கொண்டு வருவதாக இருக்க வேண்டும். மேலும் பல்கலை கழகங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை கவனிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் ஏதாவது வழிமுறைகள் வழங்கி உள்ளதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சென்னை ஐகோர்ட்டின் இடைக்கால தடை உத்தரவையடுத்து அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளுககு தொழில் நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகம், கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

அதில் ஆணழகன் போட்டி, அழகிப் போட்டி விவகாரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை பின்பற்ற வேண்டும். எனவே கல்லூரி வளாகம், பல்கலைக் கழக வளாகங்கள் ஆணழகன், அழகிப்போட்டி நடத்த தடை விதிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டயம் அருகே கிணற்றில் தள்ளி மனைவியை கொன்ற கணவன் கைது!!
Next post அண்ணாநகரில் பெண்ணிடம் நகைபறிப்பு!!