ஒரு ரூபாய் சில்லரை தகராறு: பயணியின் கன்னத்தில் அறைந்த பஸ் கண்டக்டர்!!

Read Time:1 Minute, 30 Second

94186a09-1cbb-4014-9958-ec5582725adf_S_secvpfதிருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பஸ் (6டி) சென்றது. கண்டக்டராக யுவராஜ் இருந்தார்.

பெசன்ட் நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது ஆற்காட்டு குப்பத்தை சேர்ந்த கணபதி ஏறினார். அவர் 11 ரூபாய் டிக்கெட் எடுப்பதற்கு சில்லரையாக காசுகள் கண்டக்டரிடம் கொடுத்தார்.

அதில் ரூ.10 மட்டும் இருப்பதாகவும், மீதி ஒரு ரூபாய் தருமாறு கணபதியிடம், கண்டக்டர் யுவராஜ் கேட்டார். இதனை மறுத்த யுவராஜ் சரியாக ரூ.11 கொடுத்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த கண்டக்டர் யுவராஜ், பயணி கணபதியின் கன்னத்தில் அறைந்தார். இதில் அவரது உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இதுகுறித்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாஸ்திரி நகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்!!
Next post மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது அரசு பள்ளி ஆசிரியர் கைது!!