கோட்டயம் அருகே கிணற்றில் தள்ளி மனைவியை கொன்ற கணவன் கைது!!

Read Time:2 Minute, 6 Second

2f445ff5-a212-421b-82c7-5038017568d8_S_secvpfகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பள்ளிக்கத்தோடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிந்து (வயது 34).

இவர் கோட்டயம் நகராட்சியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். வழக்கம் போல் நேற்றும் தகராறு ஏற்பட்டது.

இதில் ராஜேஷ் ஆத்திரமடைந்து பிந்துவை சரமாரியாக தாக்கினார். பின்னர் தரதரவென்று இழுத்துச்சென்று வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் தள்ளினார்.

பின்னர் கிணற்றுக்குள் இறங்கி பிந்துவின் தலைமுடியைப்பிடித்து தண்ணீருக்குள் அமுக்கினார். அவரது அபயக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு கயிற்றை கிணற்றுக்குள் வீசி அதனை பிடித்து வெளியே வருமாறு கூறினர். ஆனால் ராஜேஷ் அதை தடுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ராஜேஷ் மீது கற்களை வீசி தாக்கினர்.

பின்னர் பள்ளிக்கத்தோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் வருவதற்குள் ராஜேஷ் கிணற்றில் இருந்து வெளியேறி தப்பி விட்டார். போலீசார் விரைந்து வந்து பிந்துவை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பிந்து பரிதாபமாக இறந்தார். தப்பி ஓடிய ராஜேசை சிறிது நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை: விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை- திருடியதற்கு 7 ஆண்டு சிறை!!
Next post கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை: இயக்குனர் அலுவலகம் உத்தரவு!!