பேருந்துகளை வழிமறித்து பள்ளி மாணவிகளை முரட்டுத் தனமாக தாக்கிய ஈவ் டீசிங் கும்பல்!!

Read Time:1 Minute, 35 Second

59bdac08-1cf9-4132-ba2b-1a38a329c81e_S_secvpfஉத்தர பிரதேச மாநிலத்தில் ஈவ் டீசிங் ஆசாமிகள் மாணவிகளை முரட்டுத் தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாம்லி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நேற்று பொதுத் தேர்வு எழுதி முடிந்ததும் 2 பேருந்துகளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். டாப்ரானா கிராமம் அருகே சென்றபோது, 8 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்கள் மாணவிகளை நோக்கி ஆபாசமாக பேசியதுடன், வாகனங்களையும் வழிமறித்துள்ளனர்.

வரம்பு மீறி நடந்துகொண்ட அந்த வாலிபர்களை மாணவிகள் கண்டித்து அமைதியாக செல்லும்படி எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் லத்தியால் மாணவிகளையும், டிரைவர்களையும் தாக்கத் தொடங்கினர். இதில் ஒரு மாணவி மற்றும் இரண்டு டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். அப்போதும் ஆத்திரம் தணியாத அந்த கும்பல் பேருந்துகளை அடித்து நொறுக்கியது.

இச்சம்பவம் குறித்து 8 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை இன்று கைது செய்துள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அண்ணாநகரில் பெண்ணிடம் நகைபறிப்பு!!
Next post அவினாசி அருகே வீட்டில் தனியாக வசித்த பெண் கழுத்தை அறுத்து கொலை!!