கடத்தல் கும்பலால் திருட்டு தொழிலுக்கு கடத்தப்பட்ட மேலும் 4 சிறுவர்கள் மீட்பு!!

Read Time:2 Minute, 53 Second

e4fa5157-3244-4d6d-8e85-b9685d8b2f6c_S_secvpfகும்பகோணம் அருகே உள்ள மேலகாவிரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விஜய் (வயது14). இவரை கடந்த 18–ந் தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

இது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருவெறும்பூர் போலீசார் கடந்த 24–ந் தேதி காந்திநகரை சேர்ந்த ரஜினி (37), அர்ஜூணன் (30) ஆகியோரிடம் இருந்து விஜயை மீட்டு 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் 15–க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி அவர்களுக்கு திருட்டு தொழில் கற்று கொடுத்து சூரத்தில் விற்பனை செய்ததும், இவர்களுக்கு பின்னால் பெரிய கும்பல் செயல்பட்டதும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் கடத்திய 2 சிறுவர்களையும் மீட்டனர்.

இதை தொடர்ந்து இந்த கடத்தலில் மேலும் தொடர்புடைய திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்த சுப்பிரமணி (39) , மதுரை மேலூர் வாஞ்சிநகரத்தை சேர்ந்த அழகர் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த குழந்தைகள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேரையும் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சூரத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தியதில் இந்த கும்பலால் கடத்தப்பட்டு சூரத்தில் திருட்டு தொழிலுக்கு விற்கப்பட்ட மேலும் 4 சிறுவர்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுவர்களையும் போலீசார் ரெயில் மூலம் விரைவில் திருச்சிக்கு அழைத்து வருகிறார்கள். பின்னர் அந்த சிறுவர்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப் படுகிறார்கள்.

மேலும் இந்த கடத்தல் கும்பல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இருந்து குழந்தைகளை கடத்தியிருக்கலாம் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதால் கும்பல் தலைவனை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணி டிரைலர்!!
Next post ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து காமுகர்களின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண்கள்!!