உலகின் அதிக எடை கொண்ட 10 மாத ஜார்க்கண்ட் குண்டு பாப்பா!!

Read Time:2 Minute, 41 Second

fae4ba54-ac97-459e-a3ef-43abb282240d_S_secvpfவட இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் ஆலியா சலீம் தான் உலகிலேயே அதிக எடை கொண்ட பத்து மாத குழந்தை என்று தெரியவந்துள்ளது.

பிறக்கும் போது 9 பவுண்ட் எடை இருந்த இந்த குழந்தைக்கு தற்போது 10 மாதம் ஆகின்றது. ஒரு வயதை நெருங்குவதற்குள் 6 வயது சிறுமிக்கான உடல் எடையை ஆலியா கொண்டிருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களும் வியப்பு தெரிவித்துள்ளன.

ஊடகங்கள் வியப்பு தெரிவித்து வரும் அதே வேளையில் இதைப்போன்ற அபரிமிதமான உடல் பருமனுடன் ஆலியாவுக்கு முன் பிறந்த தங்களது மற்றொரு குழந்தை ஒன்றரை வயதில் இறந்துப் போனதால் பெற்றோரான முகமது சலீமும் ஷாப்னா பர்வீனும் கவலையடைய தொடங்கியுள்ளனர்.

நாளுக்கு நாள் பருமனாகிக் கொண்டே வரும் ஆலியாவின் உடைகள் சிறிதாகிக் கொண்டே போவதால் வாராவாரம் அவளுக்கு புதிய உடைகளை வாங்கும் செலவுடன் இதே வயதிலான சராசரி குழந்தையை விட 3 மடங்கு அதிகமான பால் மற்றும் உணவு வகைகளையும் ஆலியாவுக்காக வாங்க உள்ளதாகவும் தாய் ஷாப்னா பர்வீன் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

‘எங்கள் கிராமத்தில் இருக்கும் டாக்டர்களிடம் குழந்தையை காண்பித்தபோது தலைநகர் ராஞ்சியில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகும்படி கூறினார்கள். ராஞ்சிக்கு போனால் இன்னொரு மாநிலத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி சொல்கிறார்கள்.

டெய்லராக கூலிக்கு வேலை செய்யும் என்னுடைய வருமானத்தை வைத்து குழந்தைக்கு தேவையானதை வாங்கித்தந்து குடும்ப செலவினங்களை கவனிக்கவே முடியவில்லை. இதில் ஊர்,ஊராக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்று பணம் செலவழிக்க எங்களுக்கு போதிய வருமானம் இல்லை’ என்று தந்தை சலீம் வருத்தத்துடன் கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து காமுகர்களின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண்கள்!!
Next post சம்பந்தனின் நகர்வுகள் தோல்வியுறுமா? -யதீந்திரா (கட்டுரை)!!