ரூ.3 கோடி சொத்து இருந்தும் திருமணம் செய்ய முடியாததால் அண்ணனை கொன்றேன்: தம்பி வாக்குமூலம்!!

Read Time:2 Minute, 33 Second

c34fb649-7227-4cf7-9c39-604d5c07f1d5_S_secvpfசேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியை சேர்ந்த நிலத்தரகர் உமாபதி (வயது 48) கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குணசேகரன்(வயது 30), செந்தில்(வயது 31) ஆகியோரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் கூறிய தகவலின் பேரில் உமாபதியை கொலை செய்த அவரது தம்பி மாரியப்பன் (வயது 36). அவரது நண்பரும், பிரபல ரவுடியுமான விஜய் ஆனந்த்(வயது 35) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையம் வந்து கிராம நிர்வாக அதிகாரி முன் சரண் அடைந்தனர். இவர்களை பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான மாரியப்பன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:–

எனக்கு பள்ளப்பட்டியில் 3 ஆயிரம் சதுர அடியில் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இந்த நிலத்தை விற்க கூடாது என எனது அண்ணன் உமாபதி தடுத்து வந்தார். பின்னர் அவர் கோர்ட்டிலும் வழக்கு போட்டார்.

ரூ.3 கோடி சொத்து இருந்தும் இதை என்னால் அனுபவிக்க முடியவில்லை. எனக்கு பெண் பார்க்க சென்றால் சொத்து இல்லாதவருக்கு நாங்கள் எப்படி பெண் தருவது என கூறி பெண் தரவில்லை. இதனால் வாழ்க்கை வெறுத்து இருந்த நான், திருமணம் ஆகாத வறுத்தத்தில் சதி திட்டம் தீட்டி எனது அண்ணனை கொன்றேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

மாரியப்பனுடன் கைதான விஜய்ஆனந்த பிரபல ரவுடி ஆவார். இவர் சேலம மணக்காடு பகுதியை சேர்ந்தவர்., இவர் 2 கொலை வழக்கில் கைதானவர். இவர் மீது வேறு வழக்குகள் ஏதும் உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகைக்கு பன்றிக் காய்ச்சல்!!
Next post செய்யாறு அருகே மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்ற வாலிபர்!!