நகை திருடிய பெண்ணை பஸ் ஸ்டாண்டில் நைய்யப்புடைத்த போலீஸ்காரர்: பரவும் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

Read Time:1 Minute, 40 Second

c841dd5d-da5a-4356-8c66-1e2f17b814c2_S_secvpfமராட்டிய மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள சலிஸ்கான் பஸ் நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண்ணின் தங்க நகையை சுமார் 35 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் பறிக்க முயன்றுள்ளார்.

திருட வந்த பெண்ணிடமிருந்து தனது நகையை சாமர்த்தியமாக பாதுகாத்துக் கொண்ட அந்தப் பெண் போட்ட கூச்சலை கேட்டு அந்தப் பகுதி வழியாக சென்ற போலீஸ் தலைமை காவலர் சசிகாந்த் ஜகநாத் மகாஜன் என்பவர் சம்பவ இடத்துக்கு வந்தார்.

வந்த வேகத்தில் நகையை திருட முயன்றதாக கூறப்படும் பெண்ணை மனம் போன போக்கில் தாறுமாறாக அந்த போலீஸ்காரர் அடித்து உதைக்க தொடங்கினார். பின்னர், அந்தப் பெண்ணை கைது செய்யாமல் தப்பிச் செல்ல விட்டுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது, ‘பேஸ்புக்’ மற்றும் ‘டுவிட்டர்’ மூலம் படுவேகமாக பரவி வருகின்றது.

என்ன தான் அதிகாரம் இருந்தாலும் தீர விசாரிக்காமல் பொது இடத்தில் ஒரு பெண்ணை போட்டு மாட்டை அடிப்பதுபோல் அடித்து இம்சைப்படுத்திய அந்த கடமை உணர்வு மிக்க காவலரை பொதுமக்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செய்யாறு அருகே மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்ற வாலிபர்!!
Next post வேலைக்கு அழைத்து சென்று சித்ரவதை: மலேசியாவில் இருந்து மீட்கப்பட்ட மதுரை பெண் கண்ணீர்!!