வளசரவாக்கத்தில் இளம்பெண்ணை காரில் வைத்து விபசாரம்: சினிமா நடிகர் கைது!!

Read Time:2 Minute, 5 Second

a0e670b9-bc8d-426e-8278-c44b23e5ae3d_S_secvpfவளசரவாக்கத்தில் வணிக வளாகங்கள் முன்பு இளம் பெண்களை காரில் வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண் காணிப்பில் ஈடுபட்ட போது காரில் சுற்றும் விபசார கும்பல் வாடிக்கையாளர்களை ராமாபுரம் செல்லம்மாள் நகரில் உள்ள வீட்டுக்கு அழைத்து செல்வது தெரிந்தது.

இதையடுத்து அந்த வீட்டுக்குள் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அங்கு விபசார புரோக்கராக செயல்பட்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்ற ஆதித்யாவை கைது செய்தனர். பெங்களூரை சேர்ந்த இளம்பெண்ணை மீட்டனர்.

விசாரணையில் ரமேஷ் சில தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடித்து இருந்தது தெரிந்தது. தற்போது சினிமா வாய்ப்பு இல்லாததால் பணம் சம்பாதிக்க விபசார தொழிலில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளார். அவரிடம் இருந்து சொகுசு கார் பறிமுதல் செய்யபபட்டது.

இதேபோல் கொங்கையூர் கண்ணதாசன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து விபசார தொழில் நடத்திய மனோகரனை கைது செய்தனர். ஆந்திர மாநில இளம் பெண் மீட்டகப்பட்டார்.

அரும்பாக்கம், கிழக்கு தெருவில் விபசார புரோக்கர் கோடம்பாக்கத்தை சேர்ந்த சத்யா, மணப்பாக்கம் சிவன் கோவில் தெருவில் அரக்கோணம் சதீஷ் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்கள் பிடியில் இருந்த மிசோராம், ஆந்திர இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பமாக்கி விட்டு காதலன் கைவிட்டதால் மாணவி தீ குளித்து தற்கொலை!!
Next post 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபரேஷனின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் மறந்து வைத்து தைத்த நூல்கண்டு!!