திருவாடானை அருகே மண்வெட்டியால் அடித்து வாலிபர் படுகொலை: அண்ணன் வெறிச்செயல்!!

Read Time:1 Minute, 50 Second

39155699-088b-4c09-b20d-ecb23448bf74_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த ஆயிங்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு ரமேஷ் (வயது 29), இளைய ராஜா (24) என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரமேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கோட்டைவள்ளி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளைய ராஜாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் ரமேசின் தம்பி இளையராஜா அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பும் இளையராஜா, ரமேஷ் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கோட்டைவள்ளி போலீசில் புகார் அளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா நேற்று மீண்டும் மது அருந்திவிட்டு ரமேஷ் மற்றும் அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென ரமேஷ் அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து தம்பி இளையராஜாவை அடித்ததில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இளையராஜா துடிதுடித்து பலியானார்.

தகவல் அறிந்த திருவாடனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மற்ற ஆண்களுடன் பழகியதால் காதலியை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்!!
Next post மாணவ–மாணவிகள் மயக்கம்: பல்லி கிடந்த பணியாரம் விற்ற பெண் கைது!!