கர்ப்பமாக்கி விட்டு காதலன் கைவிட்டதால் மாணவி தீ குளித்து தற்கொலை!!

Read Time:2 Minute, 20 Second

51f51f42-d88e-4933-a030-5fce65bf1694_S_secvpfகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஓலச்சேரியை சேர்ந்த ராகவனின் மகள் ஸ்நேகா (வயது 16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வேதனை தாங்க முடியாமல் அங்குமிங்கும் ஓடிச்சென்று அலறி சத்தம் போட்டார்.

ஸ்நேகாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ஸ்நேகாவின் உடலில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயை அணைத்த அக்கம் பக்கத்தினர் ஸ்நேகாவை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாலக்காடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து படுகாயம் அடைந்த ஸ்நேகாவிடம் வாக்குமூலம் பெற்றனர்.

அதில் ஸ்நேகா கூறியதாவது:–

நானும் பக்கத்து வீட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரமோத் (19) என்பவரும் காதலித்தோம். திருமண ஆசைகாட்டி என்னிடம் பலமுறை உறவுகொண்டார். இதில் நான் கார்ப்பமானேன்.

இது குறித்து பிரமோத்திடம் கூறி என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். இதனால் நான் தீ குளித்தேன் என்று கூறினார்.

இந்நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்நேகா பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து மைனர் பெண்ணை திருமண ஆசைகாட்டி கர்ப்பமாக்கிய வாலிபர் பிரமோத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெகமம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்: அண்ணன்–தம்பி கைது!!
Next post வளசரவாக்கத்தில் இளம்பெண்ணை காரில் வைத்து விபசாரம்: சினிமா நடிகர் கைது!!