மணல் கடத்தலை தடுத்த சப்–இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!

Read Time:1 Minute, 19 Second

07e25cd4-e840-4c85-98df-0df4f015c194_S_secvpfவெங்கல் அருகே உள்ள அத்தங்கி காவனூர், கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக வெங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்–இன்ஸ்பெக்டர் ரவி, தலைமை காவலர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை தடுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த டிராக்டரை ஓட்டி வந்த 2 வாலிபர்களும் சப்–இன்ஸ்பெக்டர் ரவி, தலைமை காவலர் கோவிந்தசாமி மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றனர். உஷாரான அவர்கள் விலகி உயிர் தப்பினர். மேலும் இரும்பு கம்பியாலும் போலீசாரை மணல் கடத்தி வந்த இருவரும் அடிக்கப் பாய்ந்தனர். உடனே அவர்களை மற்ற போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கிலாம்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, ரங்கநாதன் என்பது தெரிந்தது. மணல் கடத்தலை தடுத்த போலீசாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகங்கை அருகே தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: 2 பேர் கைது!!
Next post ஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற காமுகன் கைது!!