குடிபோதையில் அடித்து உதைத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை!!

Read Time:2 Minute, 3 Second

b5d0bed6-18d7-4a59-8660-c00e5ecbe743_S_secvpfஸ்ரீரங்கம் அருகே உள்ள வீரேஸ்வரம், புதுத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (30). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது.

குடிப்பழக்கம் உள்ள பழனிவேல் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 16.2.2014 அன்று மாலையில் குடிபோதையில் வந்த பழனிவேல் மனைவி உமா மகேஸ்வரியை சாலையில் இழுத்து போட்டு அடித்துள்ளார். மேலும் அப்போது கர்ப்பிணியாக இருந்த உமா மகேஸ்வரியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த உமாமகேஸ்வரி அன்று தீக்குளித்தார். உயிருக்கு போராடிய அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 19.2.2014 அன்று உமா மகேஸ்வரி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெசிந்தா மார்டின் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக அம்மு ஆஜரானார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதற்காக 3 ஆண்டுகள், தற்கொலைக்கு தூண்டியதற்கு 8 ஆண்டுகள் என மொத்தம் 11 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து நீதிபதி ஜெசிந்தா மார்டின் தீர்ப்பு கூறினார். இதை தொடர்ந்து பழனிவேல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவ–மாணவிகள் மயக்கம்: பல்லி கிடந்த பணியாரம் விற்ற பெண் கைது!!
Next post சிவகங்கை அருகே தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: 2 பேர் கைது!!