புகையிலை கொடுக்காததால் கொத்தனாரின் உடல் முழுவதும் பிளேடால் கிழித்த நண்பர்!!

Read Time:1 Minute, 30 Second

5d6a8db0-ed48-4ef9-a9b1-91385ad47c99_S_secvpfஊரப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (39). கொத்தனார்.

இவர் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த திருத்தேரி, வ.உ.சி. 2–வது தெருவைச் சேர்ந்த நண்பர் கோபிநாதத்துடன் ஊரப்பாக்கத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் கோபால், புகையிலை (ஹான்ஸ்) போட்டார். உடனே கோபிநாத் அவரிடம் தனக்கும் புகையிலை தருமாறு கேட்டார்.

இதற்கு கோபால், உன் வயது என்ன? எனது வயது என்ன என்னிடம் புகையிலை கேட்கலாமா? என்று கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த கோபிநாத் மறைத்து வைத்திருந்த பிளேடால் கோபாலின் உடல் முழுவதும் சரமாரியாக கிழித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறினார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கோபாலை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பாலியல் வன்புணர்வு வீடியோ: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது உச்ச நீதிமன்றம்!!
Next post டெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்த எய்ம்ஸ் டாக்டர் உள்பட 5 பேர் கைது!!